போருக்கு தயாராகும் இந்தியா? – பிரமர் முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முக்கியமான ராணுவ படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார். அப்போது சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 85,940 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 85 ஆயிரத்து 940 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 753-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 ஆயிரத்து 258 பேர் குணம‌‌டைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 29 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்….

மேலும்...

கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவியது எப்படி? – அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன் (18 ஏப் 2020): கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகானத்தின் ஆய்வகத்திலிருந்து தவறாக வெளியேறியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை சீனாவின் வுகான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் அறிவித்திருந்தது. இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச்…

மேலும்...

அப்போது ஊகான் தற்போது பெய்ஜிங் – கொரோனா பரபரப்பில் மீண்டும் சீனா!

பெய்ஜிங் (13 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள விவகாரம் அங்கு பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரேநாளில் 108 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 6 வாரங்கள் கழித்து தற்போது அங்கு வைரஸால்…

மேலும்...

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்!

பீஜிங் (07 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் இதுவரை 81,708 பேரை கொரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. அவா்களில், 1,299 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 77,078 போ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனா். 3,331 போ் உயிரிழந்துவிட்டனா். இந்த நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே, நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தரைவழி, வான்வழி போக்குவரத்து…

மேலும்...

கொரோனாவை தொடர்ந்து மிரட்டும் அடுத்த வைரஸ் ஹன்டா!

யூனான் (24 மார்ச் 2020): உலகையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்க சீனாவில் ஹான்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாடுகளில் பரவி உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸிலிருந்து மக்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று…

மேலும்...

ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 145…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...