தெலுங்கானா முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் (11 மார்ச் 2022): தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடது கை வலி காரணமாக அவர் அவதிபட்டதாக தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்களால் ஆஞ்சியோகிராம் மற்றும் சி.டி ஆகியவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சோதனை முடிவில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும். அவருடன் அவரது மனைவி ஷோபா,…

மேலும்...