கருப்பு சிவப்பு மாஸ்க், சைக்கிள், நடைபயணம் – வாக்குப்பதிவில் அசத்திய நடிகர்கள்!

சென்னை (06 ஏப் 2021): தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகர்கள் சில அடையாளங்களுடன் வாக்களிக்க வந்தமை பேசுபொருளாகியுள்ளது. இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர்….

மேலும்...

சாலையில் அனாதையாய் கிடந்த ரூ 11 லட்சம்!

சிதம்பரம் (05 ஏப் 2021): நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் சிதம்பரம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டம் அருகே இளைஞர்கள் சிலர் நின்றிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய உடனே அவர்கள் தப்பி…

மேலும்...

சினிமாவிலிருந்து விலகல் – கமல் பகீர் தகவல்!

கோவை (04 ஏப் 2021): அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:- கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன். அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன்….

மேலும்...

திமுக எம்பி கனிமொழி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா பாசிட்டிவ்!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும்…

மேலும்...

எம்பி நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – மனமேல்குடியில் போலீஸ் குவிப்பு!

அரந்தாங்கி (02 ஏப் 2021): ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கோட்டைப்பட்டினம் அருகில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.M.P அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள். அம்மாபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு, கோட்டைப்பட்டினத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் வேளையில் இடையில் உள்ள…

மேலும்...

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னை (02 ஏப் 2021): சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை விட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சபரீசன் வீட்டில் நடைபெறக்கூடிய வருமான வரி சோதனை சோதனையை முன்னிட்டு வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...

ஆ.ராசாவுக்கு தடை!

சென்னை (01 ஏப் 2021): சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை…

மேலும்...

நமீதாவே தேவலாம் – கொந்தளிக்கும் பாஜகவினர்!

சென்னை (31 மார்ச் 2021): பாஜகவிற்கு ஆதரவாக ராதாரவி பேசுவது பாஜகவுக்கு பெரிய பாதிப்பு என கூறப்படுகிறது. நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்புக்காக ராதாரவி பேசும்போது, “என் குடும்பமே வில்லன் குடும்பம்.. என் அப்பாவுக்கு 20 பொண்டாட்டிங்க.. ஆனாலும் அவர் யாரையுமே தெருவில் விடவிலை.. இதுவே கமலை எடுத்துக்குங்க.. நம்பி வந்த 3 பொண்ணுங்களையும் காப்பாத்தினாரா? அவர் ஒரு கிறிஸ்தவர்..” என்றும், “கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்… நீ இதுவரை எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்டிருப்பே…..

மேலும்...

இப்படி பேசிடுச்சே அந்த பொண்ணு – சீறிய கமல்!

சென்னை (31 மார்ச் 2021): விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது.. பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து…

மேலும்...