4 வருடமாக படுக்கையில் கிடந்த நோயாளி கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எழுந்து நடக்கத் தொடங்கிய அதிசயம்!

பொகாரோ (15 ஜன 2022): ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்த ஒருவர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார். பொகாரோவின் பெடார்வார் கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளானார். விபத்தைத் தொடர்ந்து அவர் குரல் இழந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் துலர்சந்த் ஜனவரி 4 அன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசியைப் பெற்ற ஒரு நாளுக்குப்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியது குறித்து அதிர்ச்சி தகவல்!

சென்னை (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை நாடெங்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு…

மேலும்...