ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த சங்கராச்சார்யா பல்கலைக் கழகம்!

கொச்சி (21 ஜன 2020): கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கிடையே கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருகை புரிந்த பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள்!

கொச்சி (12 ஜன 2020): கேரளாவில் பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் பெரிய ஜும்மா பள்ளிக்கு வருகை புரிந்தனர். ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சி பெரிய ஜும்மா மசூதி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நீதிபதி அலெக்‌சாண்டர் தாமஸ், சுவாமி குருரத்னம் ஞான தவசி, ஃபாதர் வில்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு சொற்பழிவை கேட்டனர். பின்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

மேலும்...