முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது!

ஓசூர் (05 ஜன 2022): பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ்…

மேலும்...

முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் . ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது!

சென்னை (28 நவ 2021): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க 4…

மேலும்...

சொகுசு அறையில் கைதான பிரபல தமிழ் நடிகர்!

மூணாறு (23 நவ 2021): பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மூணாறு சொகுசு அறையில் கைதாகியுள்ளார். மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன்…

மேலும்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் ரஜினிகாந்த் கைது!

கரூர் (17 நவ 2021): கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார்…

மேலும்...

சிறுவர் ஆபாச வீடியோக்கள் – சிபிஐ அதிரடி சோதனை!

புதுடெல்லி (17 நவ 2021): ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் 23 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர் ஆபாச வீடியோக்களை பரப்பிய 83 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல்வேறு குழுக்களில் 5,000 பேர் வீடியோவைப் பரப்பி வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும்...

திரிபுரா வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளர்கள் கைது!

புதுடெல்லி (15 நவ 2021): திரிபுராவில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்ட இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எச்டிடபிள்யூ நியூஸ் என்கிற இணையதளத்தின் பத்திரிக்கையாளர்களான சம்ருதி ஷகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் திரிபுராவிலிருந்து டெல்லி திரும்பி விடுதியில் தங்கியிருந்தபோது இருவரும் நேற்று இரவு 10:30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைதுக்கு கடும்…

மேலும்...

முஸ்லிம் மத அறிஞர் கைது – மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

லக்னோ (23 செப் 2021): உத்திர பிரதேசத்தில் மதகுரு மவுலானா கலீம் சித்தகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதசார்பற்ற கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவான அமனதுல்லா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இவர் பலரை கட்டாய மத மாற்றம் செய்ததாகக்…

மேலும்...

சவூதியில் சமூக வலைதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் ஹரீஷ் விடுதலை!

தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான ஹரீஷை விடுதலை செய்ய…

மேலும்...

இளைஞர் உயிரோடு எரிப்பு – பாஜக நிர்வாகி கைது!

புதுச்சேரி (27 ஜூலை 2021): புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை உயிரோடு எரித்த புகாரில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மௌரியா. மாநில பாஜக வணிக பிரிவு அமைப்பாளராக உள்ள இவர், மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பெட்ரோல் பங்க்கிற்கு நள்ளிரவு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது ராஜ மௌரியா, சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது….

மேலும்...