இந்திய மருந்துகளை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சித் தகவல்!

உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காம்பியாவில் குழந்தைகள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் இருந்து இதே போன்ற அறிக்கை வந்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப்பைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மேலும்...

குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனை அவசியம்!

ரியாத் (07 ஜன 2022): குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெற்று கொடுக்க வேண்டும் என்று சவூதி உணவு மற்றும் மருந்து அமைப்பு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான நோய்கள் மற்றும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுமாறு சவூதி உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,பெற்றோர்களை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும் பாரசிடமால் மருந்தின் அளவுகள் அவற்றின் எடை மற்றும் மருந்தின் செறிவுக்கு…

மேலும்...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம்!

புதுடெல்லி (03 ஜன 2022): நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது….

மேலும்...

சிறுவர் ஆபாச வீடியோக்கள் – சிபிஐ அதிரடி சோதனை!

புதுடெல்லி (17 நவ 2021): ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் 23 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர் ஆபாச வீடியோக்களை பரப்பிய 83 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல்வேறு குழுக்களில் 5,000 பேர் வீடியோவைப் பரப்பி வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும்...

மக்கா ஹரம் பள்ளிக்குள் செல்ல 12 வயதுக்கு மேல்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி!

மக்கா (19 ஆக 2021): மக்காவில் உள்ள ஹராம் மசூதிக்குச் செல்ல குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைத்த பிறகு, பல குழந்தைகள் ஹராம் மசூதிக்கு சென்று உம்ரா செய்து பிரார்த்தனை செய்தனர். கோவிட் பரவலை அடுத்து, ஹராம் மசூதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமலிருந்தனர். இதனை அடுத்து படிப்படியாக கோவிட் பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக குறைந்த அளவில் குழந்தைகள் அல்லாத உள் நாட்டு உம்ரா யாத்திரீகர்கள் மட்டும் மக்காவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி திட்டம் தொடங்கிய பிறகு அது…

மேலும்...

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!

இஸ்லாமாபாத் (07 பிப் 2020): பாகிஸ்தானில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்மானம் பாக். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மத் கான் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அதேவேளை இதற்கு எதிர்ப்பும் இருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தணடனைகளை…

மேலும்...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம்…

மேலும்...