சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19…

மேலும்...