திமுக எம்பியின் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கம்!

சென்னை (17 அக் 2020): திமுக எம்பி கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கவுதமசிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...