பாட புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடல்!

கள்ளக்குறிச்சி (23 ஜூலை 2022): மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பாட புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது காண்போரை கண் கலங்க வைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது….

மேலும்...

கள்ளக்குறிச்சி விவகாரத்தால் விடுமுறை விட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து – மெட்ரிக் இயக்குனரகம் எச்சரிக்கை!

சென்னை (21 ஜூலை 2022) : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தன்னிச்சையாக வேலைநிறுத்தம் செய்த பள்ளிகள் கூடுதலாக ஒரு நாள் பள்ளியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில், 18ம் தேதி திடீர் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுதும், 987 மெட்ரிக் பள்ளிகள் இயங்கவில்லை. இந்த விவகாரத்தில், தன்னிச்சையாக விடுமுறை அறிவித்ததற்கு விளக்கம் கேட்டு, தனியார்…

மேலும்...

சர்ச்சைக்குரிய கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்!

கள்ளக்குறிச்சி (18 ஜூலை 2022): மாணவி மர்மமான முறையில் இறந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது. கள்ளக்குறிச்சியை அடுத்த சின்ன சேலத்தில் சக்தி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, அங்கு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த வன்முறையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த…

மேலும்...

கள்ளக்குறிச்சி கலவரம் – பரபரப்பு பின்னணி!

கள்ளக்குறிச்சி (17 ஜூலை 2022): கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசேததனை அறிக்கையில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர்…

மேலும்...