கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்!

ஐதராபாத் (27 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 20 வயது கர்ப்பிணிப் பெண் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, அந்த பெண் நிலூஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கொரோனா சிவப்பு மண்டல மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காந்தி மருத்துவமனையில், டாக்டர் ரேணுகா, மூத்த மருத்துவர்கள் டாக்டர் அபூர்வா, டாக்டர்…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

கொரோனாவை பரப்புகிறாயா? – முஸ்லிம் கர்ப்பிணி மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல்!

ஜாம்ஷெட்பூர் (20 ஏப் 2020): ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண் மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வானா காத்தூன் என்ற 30 வயது பெண் ஒருவர் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாம்ஷெட்பூர் (எம்ஜிஎம்) மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு மருத்துவம்…

மேலும்...