பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? : கனிமொழி பொளேர் கேள்வி!

சென்னை (04 ஜன 2022): பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”தற்போது, ​​மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்; ஆனால் நாட்டில் பெண்களைப் பாதிக்கும் மசோதாவை ஆய்வு செய்யும் குழுவிற்கு அரசாங்கம் 30 ஆண்களையும் ஒரு…

மேலும்...

திமுக எம்பி கனிமொழி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா பாசிட்டிவ்!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும்…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது கனிமொழி திடீர் பாய்ச்சல்!

சென்னை (27 மார்ச் 2021): திமுகவினரின் சர்ச்சையான பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சருடன் திடீர் சந்திப்பு!

புது டெல்லி (14 அக் 2020): டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி மன்சூக் மாண்டவியாவை தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கனிமொழி எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். துறைமுகத்துக்கு சொந்தமான நிலங்களில் காற்றாலை, உணவு தானியங்களுக்கான கிடங்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். துறைமுகம்…

மேலும்...

இந்தி தெரியாது போடா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவனின் டி.சர்ட்!

சென்னை (05 செப் 2020): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர். இந்நிலையில் இந்திக்கு எதிராக தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

மேலும்...

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை (25 ஜூன் 2020): திமுக எம்பி கனிமொழி வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்ற் நிலையில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும், தூத்துக்குடி திமுக எம்.பி-யுமான கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு தலைமை காவலர் மற்றும் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக தமிழக காவல்துறை திரும்ப பெற்றது. திமுக எம்.பி கனிமொழிக்கு…

மேலும்...

எளியவர்களிடம் மட்டுமே அதிகார வர்க்கம் அத்துமீறும் – கனிமொழி ஆவேசம் (வீடியோ)

சென்னை (13 மே 2020): வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநிலையில் நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல திமுக எம்.பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ?…

மேலும்...

கொரோனா வைரஸ் – கனிமொழி எம்பி கோரிக்கை!

சென்னை (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கனிமொழி எம்பி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பரவாமல் தடுக்கும் வகையில், ” போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களை சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்.” என்று கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்...