ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது. பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும். கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு…

மேலும்...

ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

மேலும்...

மஸ்கட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!

மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் மஸ்கட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறி புறப்படும்போது இறக்கையில் இருந்து புகை கிளம்பியது. அவசர கதவு வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும்...