முதல்வர் ஷிண்டே நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்!

மும்பை (13 செப் 2022): மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மாட்டு மூத்திரத்தை தெளித்தனர். அவுரங்காபாத்தில் உள்ள பிட்கின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பானையில் கொண்டு வரப்பட்ட மாட்டு மூத்திரத்தை மேடையிலும், வழியிலும் த்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் தெளித்து வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக ஷிண்டே தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரே…

மேலும்...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

மும்பை (02 ஜூலை): மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ஷிண்டேவை நீக்கம் செய்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் புதிய மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கினார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று, மகாராஷ்டிரத்தின் 20வது முதலமைச்சராக…

மேலும்...

மகாராஷ்டிர முஸ்லிம் அமைச்சர் திடீர் ராஜினாமா!

மும்பை (05 ஜன 2020): மகாராஷ்ட்டிர முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்ப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே…

மேலும்...