ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார். சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட…

மேலும்...

மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 28 வாரங்களில் குறை மாத்தில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை 1,200 கிராம் எடையுடன் இருந்தது. 42 நாட்கள் ஐசியூவில் தங்கியிருந்த பிறகு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்தூக்கு கொண்டு…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19…

மேலும்...

கொரோனாவால் உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு!

ரியாத் (08 ஆக 2021): சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. சவுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அனைத்து சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு , 5 லட்சம் சவூதி ரியால் (1 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிக்கை நிறுவனம் (SPA) செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர சிவில் அல்லது இராணுவத் துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் இழப்பீடு…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

ஐதராபாத் (16 ஜன 2021): கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்நிறுவன படிவத்தில் கூறப்பட்டிருப்பதாவது : தடுப்பூசி பெறுநர்களுக்கு ஏதேனும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மேலும், பக்கவிளைவுகள் தடுப்பூசிக்குத் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடும்…

மேலும்...