அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – ஸ்டாலின்!

சென்னை (01 நவ 2020): தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! மூன்றுமுறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016-ல் வேளாண்துறை அமைச்சராக…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

சென்னை (30 மே 2020): தமிழறிஞர், தமிழ் மாமணி அதிரை அஹமது இன்று காலமானார். அவருக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறந்த எழுத்தாளரும் மிகச்சிறந்த பண்பாளருமான அதிரை அஹமது அவர்களின் மரணச் செய்தி மிக்க வேதனையளிகின்றது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் முதற்கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ் மக்களுக்கு தந்துள்ளார். நபி (ஸல்) வரலாறு, நல்ல தமிழ் எழுதுவோம், அண்ணலார் கற்றுத்…

மேலும்...

எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது. தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக்…

மேலும்...

பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம்…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் க. அன்பழகன் இன்று (6-3-2020) நலக்குறைவால் காலமானார். க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அது பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மரணமடந்தார். அவருக்கு வயது 98.

மேலும்...