நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் – எம்.பி, ரஹீம் பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (12 பிப் 2023): ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் உறுப்பினராக இருந்தவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சையது அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சையது அப்துல் நசீர் ஜனவரி 4ம் தேதி ஓய்வு பெற்றார். இன்றோடு ஆறு வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இன்று அவர் ஆந்திர மாநில…

மேலும்...

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!

நெல்லூர் (29 டிச 2022): ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. கந்துகூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த சோகம் ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு நகருக்கு சந்திரபாபு நாயுடு சென்றடைந்ததும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவே இந்த சோகத்திற்கு வழிவகுத்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்….

மேலும்...

அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி!

கோதாவரி (15 டிச 2021): ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்ததாகவும், மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மீட்புப்படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும்,…

மேலும்...

அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 12 பேர் பலி!

விசாகப்பட்டினம் (20 நவ 2021): ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பேருந்து அடித்த்ச் செல்லப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. கடப்பா மாவட்டத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 10 பேர் மீட்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நந்தலூரில் பேருந்தில் இருந்து 3 பேரும், குண்டலூரில் இருந்து 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ND மற்றும் RF குழுக்கள்…

மேலும்...
Temple Attack bjp

கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்.. இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர்…

மேலும்...

காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு – இது வேறமாதிரி!

கர்னூல் (15 செப் 2020): ஆந்திராவில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் நேற்று 20 வயது பெண் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை காதலித்து வந்துள்ளனர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலனின் பெற்றோர் அவருக்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ததாகவும், அவர் அவளை திருமணம் செய்து…

மேலும்...

வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது!

விஜயவாடா (23 மே 2020): ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊருக்கு செல்ல வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி அதில் பயணம் செய்த இளைஞரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ஆந்திர மாநிலம் அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்தத இளைஞர் ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப செல்ல முடியாமல் இருந்துள்ளார். அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்த அவர் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல…

மேலும்...

ஆந்திராவில் பயங்கரம் – சுருண்டு விழுந்த மக்கள்- 5000 த்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: வீடியோ

விசாகப்பட்டினம் (07 மே 2020): ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயும் கசிவால் 5000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் பிரபலமான எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பாலிமர் நிறுவனமும், Mc Dowell & Company Limited ம் இணைந்து இந்த ஆலையை இயக்கி வருகிறது….

மேலும்...

ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி!

சித்தூர் (10 ஜன 2020): குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி ( அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் ஜெயகன் மோகன் ரெட்டி பேசியதாவது: தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய ஒவ்வொரு தாய்க்கும் ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய் மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் தயங்குகின்றனா்….

மேலும்...