பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

Share this News:

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம்.

ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை போலீசிலும் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி எந்தவித தகவலும் கிடைக்காததால் அவரை விடுவித்துவிட்டனர்.

இதற்கிடையே பயணியை தேவையில்லாமல் துன்புறுத்தியதாகக் கூறி டிரைவர் ரோஹித் சிங்கை, ஊபர் நிறுவனம், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது இப்படியிருக்க டிரைவர ரோஹித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது பாஜக.


Share this News:

Leave a Reply