கட்டுக்கடங்காத டெல்லி கலவரம் – மூன்று பேர் பலி!

320

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் மூன்றுபேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் டெல்லி வன்முறை மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு வன்முறையை கட்டுப்படுத வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனா நிதியுதவியாக ரூ.1,125 கோடி வழங்கும் விப்ரோ, அசிம் பிரேம்ஜி!