நாடே எதிர் பார்க்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Share this News:

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இச்சட்டத்தை எதிர்த்து முதலில் வழக்கு தொடர்ந்தது அதனை தொடர்ந்து இதுவரை 143 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று(ஜன.,22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply