மின்னணு வாக்குப்பதிவு முறைதான் – தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2020): வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

ஈவிஎம் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுனில் அரோரா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு காரைப் போல, ஒரு பேனாவைப் போல செயல்படும் என்றும், அது சில தருணங்களில் பழுதாகக் கூடும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், ஒருபோதும் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினுள் ஊடுருவவோ, ஹேக் செய்து தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது என சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சுட்டிக்காட்டினார்.


Share this News:

Leave a Reply