மத்திய அமைச்சரின் சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) வாசகம் இன்றும் தொடரும் அவலம்!

Share this News:

புதுடெல்லி (29 பிப் 2020): மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சுட்டுத் தள்ளுங்கள் என்ற சொல் இன்றும் வன்முறையாளர்களால் தொடரப்பட்டு வருகிறது.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் அமைதி திரும்பியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அதேவேளை வன்முறையை தூண்டும் கோஷங்கள் நின்றபாடில்லை.

அமைதி பேரணி என்ற பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் டெல்லி இனப்படுகொலைக்கு வித்திட்ட கபில் மிஸ்ரா பங்கேற்றதும், அங்கு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அதேபோல டெல்லி ராஜீவ் சோக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் ‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்ற சொல் இன்றும் வன்முறையாளர்கள் கோஷமிட்டபடி சென்றுள்ளனர். இதன் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply