பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது!

Share this News:

ஜார்கண்ட் (10 ஜன 2020): பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்க்கண்ட்டில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) அவரது வீட்டுக்கு அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்துத்வா அமைப்புகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததற்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது கொலையில் இந்துத்வா அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

கவுரி லங்கேஷின் கொலை குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவரது நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்.

கௌரி லங்கேஷ் கொலை குறிந்து வழக்குப் பதிவு செய்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ருஷிகேஷ் தேவ்திகார் என்பவரை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply