அந்த ஐந்து பேரால்தான் இத்தனை பிரச்சனைகளும் – கதறும் கேரள மக்கள்!

திருவனந்தபுரம் (10 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து கேரள வந்த ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து பத்தனம் திட்ட பகுதியே தனிமைப் படுத்தப் பட்ட சூழலில் உள்ளது.

இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய ஒரே குடும்பத்தினருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அதே விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இது இப்படியிருக்க பத்தனம்திட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 1116 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதி மக்களில் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று 85 பேர் ஒரே நாளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் அந்த ஐந்து பேரை சரிவர மருத்துவ பரிசோதனை செய்யாமல் விமான நிலையத்திலிருந்து வெளியாக்கியதும், மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தும், அதனை வெளிக் காட்டாமல் வெளியேறிய அந்த ஐந்து பயணிகளையுமே கேரள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply