டெல்லியில் மசூதி மீது தீ வைத்ததை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்!

531

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்த கும்பலை படம் பிடித்த என்டிடிவி செய்தியாளர்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி மீது தீ வைத்துள்ளது. இதனை படம் பிடித்த செய்தியாளர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் செய்தியாளர் அரவிந்த் என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஆல் பாஸ் - மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லியில் இன்றும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.