இந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் – அதிர வைக்கும் தகவல்!

Share this News:

புதுடெல்லி (09 ஜன 2020): அமெரிக்க ஈரான் போர் வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா ஈரான் இடையே போர் வருமோ என்ற அச்சம் உள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கத்தை சாமானிய மக்கள் வரை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பிரச்னையால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்பது பல லட்சம் கோடிகளில் தான் கணக்கிட முடியும். இந்தப் பிரச்சனையால் ஈரானின் பொருளாதாரம், 0.3 சதவிதம் வரை பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டிலும் இது மோசமாக இருக்கும் என தெரிகிறது.

அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், ஈரான் தொடர்ந்து முதல் 3 இடங்களுக்கு உள்ளாகவே வருகிறது. ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈரான் ஆண்டுக்கு சுமார் 155.60 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்துள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் போது சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து, இந்தியாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையில், கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10,700 கோடி கூடுதல் செலவு ஆகும். இது ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வருகிறது. அமெரிக்கா – ஈரானிடையே போர் வந்தால், அரபு நாடுகளில் இருந்து வரும் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவு பாதிக்கப்படும்.

மற்றொரு புறம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் போர் ஏற்படுமானால், அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகும். 1990-களில் ஏற்பட்ட போரின் போது இந்திய அரசு, விமானங்களை அனுப்பி சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை அழைத்து வந்தது. சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்து, தற்போதைய பொருளாதார நிலையில் இந்தியா இதனை சமாளிக்க வேண்டிய கடினமான காலம் தொடங்கி இருப்பதாகவே கருதப்படுகிறது.:


Share this News:

Leave a Reply