கொரோனாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருந்து பரிந்துரை!

187

புதுடெல்லி (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு, மலேரியா நோயாளிகளுக்கு வழங்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவையும் அது விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை கரோனா சிகிச்சைக்கு அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இதனை, இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த மருந்து மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தாகும். நோயின் தீவிரத் தன்மையை உணரந்து இதனை மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் படிச்சீங்களா?:  தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரக் காலக் குழு ஆராய்ந்து பரிந்துரைத் தகவலை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.