குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மகளின் பதிவு குறித்து கங்குலி கருத்து!

Share this News:

கொல்கத்தா (19 டிச 2019): முட்டாள்களில் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஹிந்தி திரையுலகம், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டுவருகின்றனர்

இந்தநிலையில், பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் மகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அவரது பதிவுதான் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலயில் சனா கங்குலியின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சவ்ரவ் கங்குலி, “சனா ஒரு சின்னப் பெண், அவளுக்கு அரசியல் எதுவும் தெரியாது. எனவே அவளது பதிவை பெரிது படுத்த வேண்டாம். அவரது பதிவில் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் உங்கள் சுயலாபத்துக்காக மகளின் கருத்தை கொச்சைப் படுத்த வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply