அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு!

Share this News:

கவுஹாத்தி (08 பிப் 2020): அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாமில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருப்பவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களை விடுவிக்க அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதன்படி முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களிலேயே இருப்பார்கள், ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லையென்றபோதும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமே மத்திய பாஜக அரசின் புதிய குடியுரிமை சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply