ஐரோப்பிய நாடுகளின் 154 சட்ட வல்லுநர்கள் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு கடும் கண்டனம்!

Share this News:

புதுடெல்லி (25 ஜன 2020): ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தலைச்சிறந்த 154 சட்ட வல்லுனர்கள் ஒன்றினைந்து இந்தியாவின் நீதிக்கு புறம்பான CAA – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள், இந்த குடியுரிமை சட்டத் திருத்ததை “பாரபட்சமானது மற்றும் ஆபத்தான பிரிவினை ஏற்படுத்துவது” என்று எச்சரித்துள்ளார்கள்.

இன்னும் சில தினங்களில் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் முழுமையான ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் சி.ஏ.ஏ.விற்கு எதிரான இந்த கடுமையான எதிர்ப்பை அவர்கள் வெளியிடுகிறார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடுமையான ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் மேலும் மேலும் வலுவாகி வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமான 154 சட்ட வல்லுனர்கள் இதற்கு எதிராக குரல் எழுப்ப இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply