அமித் ஷாவின் மிரட்டும் அறிவிப்பைத் தொடர்ந்து வலுக்கும் போராட்டம்!

Share this News:

லக்னோ (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப் பெற்றுள்ளது.

முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர்.

குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் “எக்காரணம் கொண்டும் குடியுரிமை சட்டம் திரும்பப் பெற மாட்டாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்த நிலையில் போராட்டம் மேலும் வலுப் பெற்றுள்ளது.

போராட்டக் காரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த போதிலும், எதற்கும் அஞ்சாமல் போராட்டம் உச்சத்தை தொட்டுள்ளது.

உத்திர பிரதேசம் ஹுசைனாபாத்தில் ஆயிரக் கணக்கான பெண்கள் கடுங் குளிரையும் பொருட் படுத்தாமல் இரவு பகல் என்று பாராமல் அற வழியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களில் ஒருவரான தன்சும் அஹ்சான் கூறுகையில்,” எங்கள் போராட்டம் நியாயமானது. அரசு பல வகைகளில் எங்களை மிரட்டிப் பார்க்கிறது. ஆனால் நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை. பெண்களின் வலிமை என்ன என்பதை இனிதான் அரசு பார்க்கப் போகிறது” என்றார்.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply