நடிகை தீபிகா படுகோனுக்கு பாபா ராம்தேவ் அட்வைஸ்!

புதுடெல்லி (17 ஜன 2020): “என்னிடம் நடிகை தீபிகா படுகோன் ஆலோசனை பெற்றால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், ‘தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும்’ என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை பெற்றால் தீபிகா படுகோனுக்கு எந்த பிர்ச்சனையும் வராது’ என்றும் தெரிவித்தூள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply