ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம்!

Share this News:

ஐதராபாத் (06 டிச 2019): ஐதராபாத் கூட்டு வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

26 வயது பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப் பட்டது.

இந்த கொடூர கொலையில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் என்கவுண்டர் சம்பவத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம நிலையில் உள்ள நிலையில் ஐதராபாத் எம்பியும் AIMIM தலைவருமான அசாதுத்தீன் உவைசி என்கவுண்டர் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” என்கவுண்டர் மூலம் தண்டிப்பதை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் இதனை தெளிவாகவே கவனத்தில் கொண்டுள்ளது. போலீஸ் கஸ்டடியில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிய முறையில் விசாரனை மேற்கொள்ளாமல் தண்டிக்கப் படுவது ஏற்புடையதல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply