கொரோனா வைரஸுக்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவர் கைது!

Share this News:

கொல்கத்தா (18 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் ரூபாய் 500 க்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மபூத் அலி என்ற பால் வியாபாரி, மாட்டு முத்திரம் விறபனை செய்வதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேஜை வைத்து மாட்டு மூத்திரம் விற்பனை செய்வதை போலீசார் அறிந்தனர். உடனே மபூத் அலியை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, டெல்லியில் இந்து மகா சபா மாட்டு சிறுநீர் குடிக்கும் நிகழ்ச்சி நடத்தியதால் உந்தப்பட்டு மாட்டு சிறுநீர் விற்பனை செய்ததாக மபூத் அலி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply