பற்றி எரியும் டெல்லி – இருவர் பலி!

206

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலா - வெளிநாட்டு பயணிகளுக்கு அரசு அனுமதி (வீடியோ)

ஏற்கனவே டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா நேற்று போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்று மிரட்டியிருந்ததோடு, போலீசையும் எச்சரித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முதல் தொடங்கிய வன்முறை இன்றும் கட்டுக்குள் வரவில்லை.

அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் டெல்லி வன்முறை மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு வன்முறையை கட்டுப்படுத வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.