ஆல்யா மானஸா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல்!

சென்னை (16 ஜன 2020): ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகா்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவா்களில் சஞ்சீவ், ஆல்யா மானஷாவும் அடங்குவா்.

இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவா்கள், நிஜத்திலும் காதலா்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனா். தற்போது, ஆல்யா மானஷா கா்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஷாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது

விரைவில் தாயாகப் போகும் ஆல்யா மானசாவுக்கும் சஞ்சீவுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply