சீறு – சினிமா விமர்சனம்!

Share this News:

பல வருடங்களாகவே ஜீவாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் எதுவும் வரவில்லை. சீறு அதனை நிவர்த்தி செய்ததா?

ஜீவா மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார்.

இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார்.

அதற்காக சென்னையில் உள்ள மல்லி என்பவரை அழைக்கின்றார், மல்லி ஜீவாவை தேடி மாயவரம் வர, அங்கு ஜீவா தங்கச்சிக்கு மல்லி உதவ, அன்றிலிருந்து ஜீவா மல்லியை தன் நண்பனாக நினைக்கின்றார்.

அவரை தேடி ஜீவா சென்னை வர, அப்போது தான் தெரிகின்றது மல்லி உயிருக்கு ஒரு பெரிய ஆள் மூலம் ஆபத்து என்று ஜீவாவிற்கு தெரிய வர, அதன் பிறகு மல்லியை ஜீவா காப்பாற்றினாரா? அந்த பெரிய ஆள் யார்? என்பதே அடுத்தடுத்த காட்சிகள்

ஜீவா நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல துறுதுறுவென கச்சேரி ஆரம்பம், சிங்கம் புலி படம் போல் நடித்துள்ளார். அதிலும் தன் தங்கையிடம் பாப்பா பாப்பா என்று பேசுகையில் எமோஷ்னல் சீனிலும் திருப்பாச்சி விஜய் போல் ஸ்கோர் செய்கின்றார்.

தன் வழக்கமான கலாய் ஸ்டைலிலும், எனக்கே சென்னை லாங்குவேஜா, நீ காமெடி பண்ணா சிரிப்பே வரமாட்டுது மச்சி என்று சதீஷை கலாய்ப்பது என பழைய ஜீவாவின் அதே கலகலப்பு. வருண் மல்லியாக கலக்கியுள்ளார், அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் நல்ல அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம்.

ஆனால், மல்லி பக்கம் கதை செல்லாமல் வேறு திசைக்கு இரண்டாம் பாதியில் சென்றது தான் திரைக்கதை கொஞ்சம் தடுமாற்றம், ரத்னசிவா மாஸ் காட்சிகளை ஏதோ விஜய், அஜித் படத்திற்கு வைப்பது போல் வைத்து மிரட்டியுள்ளார். ஜீவாவிற்கும் அது செட் ஆகி போகின்றது. அதிலும் ஒரு போன் பூத் காட்சி ஒன்று பொறி பறக்கின்றது.

அதே நேரத்தில் அப்படியே மாஸாகவும், தங்கச்சி செண்டிமெண்ட் எமோஷனல் என கொண்டு சென்று இருந்தால், கண்டிப்பாக இது சரியான கமர்ஷியல் பேக்கேஜ் ஆகியிருக்கும், ப்ளாஸ்பேக் காட்சிகள் நன்றாக இருந்தாலும், அதுவே இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்ரமித்தது போல் ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.

இன்னமும் எலியும், பூனையுமாம் வில்லனுக்கும், ஜீவாவிற்கும் ஆட்டம் இருந்திருக்க வேண்டாமா ரத்ன சிவா என கேட்க வைக்கின்றது, வில்லனாக நவதீப், பெரிதும் கவரவில்லை, கத்தி படத்தில் வந்த நீல்நிதின் முகேன் போல் தான்.

படத்தின் பெரிய பலம் டி.இமானின் பின்னணி இசை, பாடல்கள் இமான் ஸ்டைலில் கேட்டதும் கவரவில்லை என்றாலும், கேட்க கேட்க பிடிக்கும் ரகம், ப்ரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் செட் எது, ரியல் எது என்றே தெரியவில்லை, மிக தத்ரூபமாக பல காட்சிகளை படப்பிடித்துள்ளார், விறுவிறு என சென்ற கதையில் ப்ளாஸ்பேக் மட்டும் எடிட்டர் கிஷோர் லாரன்ஸ் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம். ஆனால், அது கதைக்கு தேவை என்பதால் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலையாக தான் இருக்கும்.

சராசரி சினிமா


Share this News:

Leave a Reply