ஊடகங்கள் குறித்து நடிகர் ரஜினி விமர்சனம்!

Share this News:

சென்னை (14 ஜன 2020): ஊடகங்கள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது:

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; என்றாலும் இதுவும் ஒரு தந்தைக்குரிய பதவியே

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை. கவலைகள் நம் வாழவில் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது

பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்

ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது

இவ்வாறு அவர் பேசினார்.


Share this News:

Leave a Reply