மாஃபியா – சினிமா விமர்சனம்!

Share this News:

ஆரம்ப காலங்களில் சாம்பார் ஹீரோவாக இருந்த அருண் விஜய், சமீப காலமாக கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், மேலும் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன் கைக்கோர்த்துள்ளதால் படத்திற்கு எதிர் பார்ப்பு அதிகம்.

அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய டீமில் ப்ரியா மற்றும் ஒரு இளைஞர். சென்னையின் முக்கியமான இடங்களில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இருக்கு போதை பழக்கத்தை கண்டறிகின்றார்.

இதையெல்லாம் செய்வது பிரசன்னா என்று இரண்டு பேருக்கு மட்டுமே தெரிய பிரசன்னா அவர்களையும் கொல்கிறார். அருண்விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவருக்கு ஒரு லீட் கிடைக்கிறது.

அதை வைத்து பிரசன்னாவை தன்னை தேடி வர வைக்கலாம் என முடிவு செய்ய, ஆனால், பிரசன்னா அருண்விஜய் குடும்பத்தை தூக்குகிறார். பிறகு அருண்விஜய் பிரசன்னாவை தேடி செல்ல அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

அருண்விஜய் எப்போதும் போல் செம்ம பிட், போலிஸ் கதாபாத்திரத்திற்கான தோற்றம் நடிப்பு என அசத்துகின்றார், என்னை அறிந்தாலில் இருந்து தற்போது வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் பாஸ் மார்க் தான் வாங்குகின்றார்.

ப்ரியா பவானி ஷங்கர் அவரின் உதவியாளராக வருகின்றார், அவரை காதலிப்பது போலவும் காட்டுகின்றனர், இந்தியன் ஏஞ்சலினா ஜுலி போல், Gun ஷுட், சண்டைக்காட்சிகள் என முடிந்த அளவிற்கு நன்றாக நடித்துக்கொடுத்துள்ளார்.

கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் என்று கவனம் ஈர்த்தார், அதே எதிர்ப்பார்ப்பு தான் இந்த படத்திற்கும், படம் ஆரம்பிக்கும் போது போதை மருந்து பயன்படுத்துபவர்கள் குறித்து ஒரு விளக்கம் கொடுக்க, அட என்று சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது.

ஆனால், அதை தொடர்ந்து முதல் பாதியில் வரும் காட்சிகள் அனைத்தும் எந்த ஒரு சுவாரஸ்யம் திருப்பம் இல்லாமல் செல்வது கொஞ்சம் மைனஸ். அதுவும் பிரசன்னாவிற்கு வெறும் பில்டப் மட்டுமே இருக்கின்றதே தவிர, அவர் பெரிதும் மிரட்டுவில்லை. ஒரு தனி ஒருவன் அரவிந்த்சாமி போல் எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

முதல் பாதி பொறுமையை சோதித்தாலும், இரண்டாம் பாதி செம்ம விறுவிறுப்பு, அருண்விஜய், ப்ரியா மற்றும் ஒரு அதிகாரி என 3 பேரை வைத்து பிரசன்னா கும்பலை பிடிக்க போட்டும் ஆடுபுலி ஆட்டம் சூப்பர், அதிலும் கிளைமேக்ஸ் டொரோட்டினோ படம் போல் டக் டக் என்று அடித்து தும்சம் செய்து கிளைமேக்ஸில் வந்து நிற்கின்றது படம்.

அட என்னப்பா அவ்வளவு தானா என்று நினைத்தால், கார்த்திக் நரேன் தன் ஸ்டைலில் டுவிஸ்ட் கொடுத்து இரண்டாம் பாகத்தின் எதிர்ப்பார்ப்பை எகிற செய்கின்றார். Gokul Benoy ஒளிப்பதிவில் செம்ம ஸ்டைலிஷ் படம். ஒவ்வொரு காட்சியும், குறிப்பாக துப்பாக்கியிலிருந்து புல்லட் வெளிவருவது, இரத்தம் தெறிக்கும் காட்சி கூட அத்தனை தத்ரூபம், Jakes Bejoy இசையில் பின்னணி பல இடங்களில் பலம்.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், செம்ம ஸ்டைலிஷாக, ரிச்-ஆக உள்ளது. முதல் பாதி சற்று விறுவிறுப்பு குறைவு என்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது. அதைவிட படத்தின் கிளைமேக்ஸ், செம்ம டுவிஸ்ட்.

கார்த்திக் நரேனின் மற்றும் ஒரு திரில்லர்


Share this News:

Leave a Reply