மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

Share this News:

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக இந்துத்வாவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

2005-ஆம் ஆண்டில், டெல்லியின் ​லக்ஷ்மி என்பவர் இளைஞர்களால் ஆசிட் வீசி தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவத்தில் லக்ஷ்மி உயிருக்கு சிதைக்கப்பட்டார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தற்போது சபாக் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்க்க கூடாது எனவும், JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் எனவும் பாஜகவினர் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில் லக்‌ஷ்மியின் கதையை வைத்து படத்தை எடுத்துவிட்டு, அவருக்கான கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்திற்கு தீபிகா படுகோன் ஆதரவளித்ததே இந்த படத்திற்கு தடை கோர காரணம் என்பதாக சமூக வலைதளங்களில் தீபிகா படுகோனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.


Share this News:

Leave a Reply