13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து…

மேலும்...

நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சித்த மருத்துவ கவுன்சில் அழைப்பாணையை ஏற்று இன்று ஷர்மிகா வருகைத்தந்திருக்கிறார்கள். பலர் ஷர்மிகா மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் நகலை அவருக்கு கொடுத்துள்ளோம். அவற்றை அவர் படித்து எழுத்துபூர்வமாக பதிலளிப்பதாக கூறியிருக்கிறார். இதற்கான விளக்கத்தை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும்…

மேலும்...

தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய பஜக நிர்வாகி!

ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின்…

மேலும்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம்…

மேலும்...

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

மேலும்...

தாடி தொப்பி முஸ்லிம் – நடிகை ஷனம் செட்டியை கடுப்பேற்றிய விமான நிலைய செக்யூரிட்டி – வீடியோ!

கோவை (19 ஜன 2023): கோவையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட நடிகை ஷனம் செட்டி குமுறலுடல் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுளார். அதில் செக்யூரிட்டி செக்கிங் என்ற பெயரில் இரண்டு முஸ்லிம் பெரியவர்கள் மற்றும் பெயரில் ஷனம் என்பதால் நடிகை ஷனம் செட்டியையும் செக்யூரிட்டி சோதனையில் கடுமையாக தொந்தரவு செய்துள்ளனர். இதனை அவர் வீடியோவாக வெளியிட்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.

மேலும்...

தமிழ்நாட்டு ஆளுநர் மாற்றமா? – ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

சென்னை (18 ஜன2023): தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக, திமுக அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும்…

மேலும்...

குஜராத் மாடலை தமிழ்நாட்டில் பின்பற்ற திமுக எம்.எல்.ஏ பரிந்துரை!

சென்னை (16 ஜன 2023): “குஜராத் சட்டசபை போல தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம்!” என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே? குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன?” என பதிவிட்டுள்ளார். “குஜராத் மாடல்” என்ற சொல்லை வைத்தே பிரதமர்…

மேலும்...

அழகிரி வீட்டுக்கு வந்த உதயநிதி – ஷாக்கான அழகிரி!

மதுரை (16 ஜன 2023): முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வந்து அழகிரியை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரி வீட்டில் அழகிரியை சந்தித்த உதயநிதி மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

மேலும்...

ஈரோட்டில் நடைபெறும் ஜமாத்துல் உலமாவின் தேச ஒற்றுமை மாநாடு – வீடியோ!

ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று இரவு நிறைவுறும். இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்...