இம்ரான்கான் ஆட்சி கவிழ்ப்பு – புதிய பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத் (10 ஏப் 2022): பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் டுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் சனிக்கிழமை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மொத்தம் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.

ஷெபாஸ் ஷெரீபை பிரதமருக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி மார்ச் 30 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படுத்தினார்.

திங்கட்கிழமையான நாளை பிற்பகல் 2 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம் மீண்டும் கூடி பிரதமரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply