ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேனும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்து இல்லத்திற்கு சென்று ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply