இந்தியாவில் இருவருக்கு ஒமிக்றான் தொற்று!

பெங்களூரு (02 டிச2021): இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply