தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் – காரணம் ஏன் தெரியுமா?

Share this News:

சென்னை (29 ஜூலை 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply