தமிழ் நாட்டிற்கு நன்றி – நாளுக்குநாள் ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு!

கன்னியாகுமரி (11 செப் 2022): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 56 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார் ராகுல்.

குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி, இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply