தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

Share this News:

சென்னை (03 நவ 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!

திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்


Share this News:

Leave a Reply