அதெல்லாம் வேண்டாம் – எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): புகழ்ந்து பேசுவதை தவிற்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த மாதிரியான புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம் ஆவதாக கூறி முதல்வர் ஸ்டாலின், இதனை செய்ய வேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோளை விடுத்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply