சேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (17 செப் 2020): இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டால்ன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும். தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply