ஸ்டாலின் டெல்லி பயணமும் எதிர் பார்ப்பும்!

சென்னை (12 ஜூன் 2021): ஸ்டாலினின் டெல்லி பயணம் பல்வேறு தரப்பிலும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 17 அல்லது 19 ஆகிய தேதிகளில் சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் திமுக, ஒன்றிய அரசின் முடிவை எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்தது. ஆட்சிக்கு வந்த பின்னரும் அது தொடர்கிறது.

இந்நிலையில் ஸ்டாலினின் டெல்லி பயணத்தையும் மோடி உடனான சந்திப்பையும் அரசியல் அரங்கில் பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply